
ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக பேசியிருப்பதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவம் பாட்டியா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் தற்போது வரை 600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் தற்போது வரை ஜவான் திரைப்படம் அரங்கம் நிறைந்தே காட்சியளிக்கிறது. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லீ மற்றும் திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் பட்டாளமே. இப்படி நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி மற்றும் அனிருத் இசையும் ஆகும்.
இத்திரைப்படத்தில் நாட்டில் நடைபெறும் அரசு துறை நிர்வாக சீர்கேடுகள், ஊழல் என்று பல்வேறு வகைகளில் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு எதிராக ஷாருக்கான் மேற்கொள்ளும் செயல்பாடுகளே திரைப்படம். மேலும் மக்களின் ஓட்டியின் முக்கியத்துவம் குறித்தும் நடிகர் ஷாருக்கான் இத்திரைப்படத்தில் பேசியிருப்பார்.
இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ பாட்டியா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஜவான் திரைப்படத்தை பாராட்டியும், நடிகர் ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்தும் பதிவு செய்துள்ளார். அதில், 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் முறைகேடுகளை திரைப்படத்தின் மூலம் ஷாருக்கான் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது காங்கிரஸ் ஆட்சியின் அவலங்கள் நினைவுக்கு வரும். இப்படி அரசின் செயலற்ற தன்மையை திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்திய ஷாருக்கானுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதே நேரம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தூய்மையான நிர்வாகத்தை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.