
ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எட்டாவது திரைப்படமாக எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து தயாராகியுள்ள பிரதர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விவேகானந்தர் சந்தோசம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தில் நட்டு, பூமிகா, சரண்யா, பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ராஜேஷ் கூறியது, நடிகர் ஜெயம் ரவி ஆக்சன் திரில்லர் என்று பல்வேறு வகையான கதைகள்களை கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். அதே நேரம் குடும்ப பின்னணியை கொண்ட சம்திங் சம்திங், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படங்கள் ஜெயம் ரவிக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கின்றன. அந்த வரிசையில் குடும்பக் கதை களத்தோடு தயாராகி உள்ள பிரதர் திரைப்படமும் அந்த வரிசையில் இணையும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படம் 6 முதல் 60 வயது வரை உடைய அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். முழுக்க முழுக்க குடும்ப படமாக பிரதர் தயாரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.