ஜெயிலர் ரஜினி
ஜெயிலர் ரஜினி

ஜெயிக்கப்போவது ரஜினியா? ஷங்கரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரப்போகும் அடுத்த படம், ‘ஜெயிலர்.’ இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன். இதற்கு முன்பு ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் இயக்குநர் நெல்சன். இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஷங்கர் - ராம் சரண் படக் கூட்டணி
ஷங்கர் - ராம் சரண் படக் கூட்டணி

அதேபோல், இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கப்போகும் அடுத்த படத்துக்கு முதலில் ‘ஆர்.சி15’ எனப் பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்த வேளையில் தற்போது அந்தப் படத்துக்கு ‘அதிகாரி’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தில் மாவட்டக் கலெக்டராக நடிக்கும் ராம் சரணோடு, கியாரா அத்வானியும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் நிறுவத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்திருந்த வேளையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் தயாராகி வரும் ‘அதிகாரி’ படமும் ஏப்ரல் 13ம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரு படங்களில் வசூலில் கல்லா கட்டப்போகும் படம் யாருடையது என்பதை அறிய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி, ‘ஜெயிக்கப்போவது ரஜினியா அல்லது ஷங்கரா’ என்ற எதிர்பார்ப்பும் திரையுலகினரை அலைகழித்து வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com