"அதுக்கும் மேல" ஜிகர்தண்டா 2 படக்குழுவின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் ஆர்வம்!

ஜிகர்தண்டா 2
ஜிகர்தண்டா 2

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ஜிகர்தண்டா -2’ தொடர்பான வீடியோ வரும் 11ஆம் தேதி வெளியாகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". இந்த படம் மெஹா ஹிட் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் பாண்டி நாட்டு கொடியின் மேலே பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவியது. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் தான் படத்தின் டீசர் வெளியாகிருந்தது. அதில் எஸ்.ஜே. சூர்யாவும், ராகவா லாரன்ஸும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜிகர்தண்டா -2' திரைப்படத்தின் டீசருக்கும் மேலான ஒன்று வரும் 11ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. என்னவாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com