
7 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஒன்று மலேஷியா, கோலாலம்பூரில் DMY creation என்கின்ற நிறுவனம் மூல்ம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY கிரியேஷன் நிறுவன சேர்மன டத்தோ முஹம்மன் யூசுஃப் என்பவர், 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் இருந்து பாரசூட் மூலம் குதித்து, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இப்படிப்பட்ட நிகழ்வு மலேசியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்தச் சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.