சினிமாவில் 63-ம் ஆண்டு : கமல்ஹாசன் சாதனை!

சினிமாவில் 63-ம் ஆண்டு : கமல்ஹாசன் சாதனை!

சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் தனது  திரைத்துறைப் பயணத்தில் இன்று  63-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– இதுகுறித்து கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் தெரிவித்ததாவது:

உலக நாயகன் கமல் ஹாசன் முதன்முதலாக நடித்த களத்தூர் கண்ணம்மா திரைப்படம் 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி  வெளியானது. இந்தப் படத்தில்ஜாவர் சீதாராமன் எழுத்தில் ஏ. பீம்சிங் இயக்கத்தில்  ஜெமினி கணேஷ் , சாவித்திரி ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் கமல்ஹாசன்.

அந்த வகையில் அவர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து இன்றுடன்  62 வருடங்கள் நிறைவடைகிறது. அவர் மேலும் பல சிறந்த படங்களை அளித்து திரைத்துறையில் 100 ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம்.

– இவ்வாறு தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com