உதயநிதிக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ்!

உதயநிதிக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ்!

– ஜிக்கன்னு.

டிகர் உதயநிதி ஸ்டாலினின் சினிமா தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது 15 ஆண்டு திரைப் பயணத்தை நிறைவு செய்ததையடுத்து, இன்று சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 

இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டனர். 

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை கமல்ஹாசன் தெரிவித்தார். அதாவது, கமல்ஹாசனின் சொந்த சினிமா தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் தனது 54 -வது படத்தை தயாரிக்க உள்ளது.

இதையடுத்து கமல்ஹாசன்  "என்னுடைய RKFI தயாரிப்பு நிறுவனத்தின் 54- வது  படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்"  என்ற அறிவிப்பை வெளியிட, அரங்கில் பலத்த கரகோஷம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com