இணையத்தைக் கலக்கும் ஜோதிகாவின் அசத்தல் லுக்!

இணையத்தைக் கலக்கும் ஜோதிகாவின் அசத்தல் லுக்!

உடைகள் மற்றும் ஹேர் ஸ்டைலைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் ஸ்டைல் ஐகான்களில் ஒருவர் ஜோதிகா. ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகாவின் ஹேர் ஸ்டைல் பலராலும் பின்பற்றப்பட்டது. அத்தைகைய லுக் எல்லோருக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுத்த சில முகங்களுக்கு மட்டுமே அது செட் ஆகும். அத்திரைப்படத்தில் ஜோதிகா அணிந்து வந்த லாங் ஸ்க்ர்ட், ஷார்ட் டாப்ஸ் வகை உடைகள் கூட அப்போது கல்லூரிப் பெண்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

அடுத்ததாக சூர்யா, ஜோதிகா திருமணத்தின் போது ஜோதிகா அணிந்திருந்த மென்மையான தாமரைப்பூ நிறத்திலான வெள்ளி சரிகை இழைகளாலும், ஸ்வரோவ்ஸ்கி கற்களாலும் இழைக்கப்பட்ட பட்டுப்புடவையும், வெள்ளைத்தங்கத்திலான வைர நகைகளும் கூட பெரிதாக பேசு பொருளாகின.

அப்போது ஆரெம்கேவி தனது 50 வண்ணப் பட்டுப் புடவை விளம்பரத்துக்கு ஜோதிகாவைத் தான் பயன்படுத்திக் கொண்டது.

அப்போதிருந்து இளம்பெண்கள் தங்களது ஆடை, ஹேர் ஸ்டைல் தேர்வுக்கு ஜோதிகாவைப் பின்பற்றத் தொடங்கினர்.

இப்போதும் கூட ஜோதிகா கலந்து கொள்ளும் திரைப்பட விழாக்கள், குடும்ப விழாக்கள், மற்றும் அரசு விருது பெறும் விழாக்கள் என அவர் தொடர்பான எந்த நிகழ்வுகளையும் கவனித்துப் பார்த்தோமெனில் ஜோதிகாவின் ஆடைத்தேர்வுகளும், தலை அலங்காரமும் தனித்துவமானதாகவே இருக்கிறது.

ஒரு சிறந்த நடிகையாக மட்டுமல்ல, தயாரிப்பு தொடர்பான வேலைகளிலும் பிஸியாக இருக்கும் ஜோதிகாவுக்கு தற்போது 44 வயதாகிறது.

சமீபத்தில் அவரது நியூ ஹேர் ஸ்டைல் என்று இணையத்தில் வலம் வரும் புகைப்படமொன்று 2கே கிட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய இன்றைய இளசுகளிடையே அசத்தல் வைரலாகி இருக்கிறது.

மேலை நாட்டுத் திரைப்பட நடிகைகள் மட்டும் தான் வயதான பின்பும் தங்களது ஃபிட்னஸ் மற்றும் தோற்றப் பொலிவில் கவனமாக இருப்பார்கள். தென்னிந்திய நடிகைகள் வயதாக ஆக உடை எடை மற்றும் ஃபேஷனில் புதுப் புது ஐடியாக்கள் போன்ற விஷயங்களில் பெரும்பாலும் மெனக்கெட மாட்டார்கள் எனும் கேலியான வாதத்தை பொய்யாக்கி இருக்கிறார் ஜோதிகா.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் நடித்து வரும் ஜோதிகா, தன் இரு குழந்தைகளிக்கிடையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்து கொண்டு

குடும்பத்தின் புது வரவான செல்ல நாய்க்குட்டியைக் கொஞ்சும் புகைப்படம் ஒன்றும் கூட இணையத்தில் சமீபத்திய வைரலாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com