காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம் - அஞ்சலி!

சினி செய்தி

தமிழ் சினிமாவில் காதல் படங்கள் சமீபமாக வருவதில்லை என ரசிகர்கள் சிலர் குறைபட்டு கொள்கிறார்கள். காதல் படம் வெற்றியடைய நல்ல காதல் கதை தேவை. அனைவரையும் கவரும் டைட்டில் வேண்டும். இந்த அனைத்தையும் கண்களால் சொல்ல அழகான ஹீரோயின் வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கிய படமாக உருவாகி உள்ளது. 'காலங்களில் அவள் வசந்தம்' திரைப்படம்.

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இப்படத்தில் கௌஷிக் ராம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அஞ்சலி நாயர் ஹீரோயினாக நடிக்கிறார். நெடுநெல்வாடை படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகம் ஆன அஞ்சலி, டாணாக்காரன் படத்தில் அன்பும் கண்டிப்பும் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்தார். காலங்களில் அவள் வசந்தம் படத்தில் டைட்டில் நாயகியாக நடிக்கிறார்.

கௌஷிக் ராம் , அஞ்சலி நாயர்
கௌஷிக் ராம் , அஞ்சலி நாயர்

"காதலில் திருமணத்திற்கு முன்பு இருக்கும் காதல், திருமணத்திற்கு பின்பு வரும் காதல் என்று இரண்டு பகுதிகள் இருக்கிறது. இந்த படத்தில் திருமணத்திற்கு பின்பு கணவன் மனைவிக்குள் நடக்கும் காதலை சொல்லியிருக்கிறேன்.

இந்த இரண்டு பகுதி காதலையும் சரியான உணர்வுடன் வெளிப்படுத்துவத்தில் அஞ்சலி தனது திறமையான நடிப்பை தந்துள்ளார்" என்கிறார் டைரக்டர்.

அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர்

படத்தின் போஸ்டரையும் ட்ரைலரையும் பார்க்கும் போது டைரக்டர் சொல்வது சரிதான் என்பது போல் இருக்கிறது. பல பிரபலமான ஹீரோயின்களுக்கு காதல் சப்ஜெக்ட் படங்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அஞ்சலிக்கும் 'காலங்களில் அவள் வசந்தம்' திரைப்படம் வெற்றி பெற்று கனவு கன்னியாக வலம் வர வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com