ரீ ரிலீஸாகும் ‘காதல் தேசம்’!

ரீ ரிலீஸாகும் ‘காதல் தேசம்’!

தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்களை வைத்துப் பிரம்மாண்ட படங்களாக தயாரித்தவர் கே.டி.கே என்றழைக்கப்படும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வசூல் சாதனை படைத்த படங்களாகும்.

ரஜினிகாந்தின் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்வதைப் போல கே.டி.கே தயாரித்த ‘காதல் தேசம்’ படம் தெலுங்கில் வெளியாகிறது.

Kadal thesam
Kadal thesam

இளைஞர்களை காதலில் கிரங்கடித்த இந்த படத்தை இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில் ‘பிரேம தேசம்’ என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக வெளியாகியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 200க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டிருக்கிறது.

வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்து கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் வரும் ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ பாடல் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் பிரபலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com