மகனது முதல் பிறந்த நாளை கிரியேட்டிவ்வாக கொண்டாடி மகிழ்ந்த காஜல் அகர்வால்!

மகனது முதல் பிறந்த நாளை கிரியேட்டிவ்வாக கொண்டாடி மகிழ்ந்த காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தனது மகன் நீல் கிட்சுலுவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். அந்தக் கொண்டாட்டத்தை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்திருந்தார். பிறந்தநாளில் அப்படி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? காஜல் தன் மகன் பிறந்தநாளுக்காக குடும்பத்தினர் அனைவருக்குமே கஸ்டமைஸ்டு டீ ஷர்ட்டுகளை தேர்வு செய்து வாங்கி இருக்கிறார். டீ ஷர்ட்ட் தானே.. அதென்ன, அவ்வளவு பெரிய விஷயமா? எல்லோரும் தான் டீ ஷர்ட் வாங்கி அணிகிறார்கள், பெர்த்டேவுக்குப் போய் யாராவது டீ ஷர்ட்டை ஸ்பெஷல் என்று கருத முடியுமா? என்று அவசரப்பட்டு கேள்வி கேட்டு விடாதீர்கள். அந்த டீ ஷர்ட்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் தான் அதை இன்று ஸ்பெஷல் ஆக்கியிருக்கிறது. இதைத்தான் கிரியேட்டிவ் திங்க்கிங் என்கிறார்கள். காஜலுக்கு கிரியேட்டிவ் சென்ஸ் அதிகம் தான். அவர் தனது மகனது டீ ஷர்ட்டில் மிஸ்டர். வொண்டர்ஃபுல் என்று ப்ரிண்ட் செய்திருந்தார். அதே விதமாக தனக்கு, தன் கணவருக்கு, கணவரது குடும்பத்தாரான பிற உடன்பிறந்தார் மற்றும் உறவினர்கள் அனைவருக்குமே அதே விதமாகவே டீ ஷர்ட்டுகளை ஆர்டர் செய்து அவரவர் உறவுமுறைகளையும் குறிப்பிடுமாறு;

மம்மா ஆஃப் மிஸ்டர் வொண்டர்ஃபுல்

பப்பா ஆஃப் மிஸ்டர் வொண்டர்ஃபுல்

தாதா ஆஃப் , தாதி ஆஃப், நானா ஆஃப், நானி ஆஃப், பாவோ ஆஃப், மெசி ஆஃப் மிஸ்டர் Onederful என்ற ப்ரிண்ட் செய்து அதை அவரவர்களை அணியச் செய்திருந்தார்.

குழந்தையின் வயது ஒன்று என்பதால் வொண்டர்ஃபுல் என்பதைக்கூட "onderful" என்று பிரிண்ட் செய்திருந்தார்.

கூட்டுக்குடும்பமாக குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் அந்த கஸ்டமைஸ்டு டீ ஷர்ட்டுகளை அணிந்து கொண்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த விதம் பார்க்க கச்சிதமாக அழகாக இருந்தது.

காஜல் அகர்வால், கெளதம் கிட்சுலுவை 2020 ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முதல் குழந்தையான நீல் கிட்சுலு கடந்த 2022, ஏப்ரல் மாதம் பிறந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com