காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' திரைப்படம்!

காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' திரைப்படம்!

'யாமிருக்க பயமேன்', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயற்றிய டீகே அவர்களின் புதிய படம் 'கருங்காப்பியம்' திரைப்படம். நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி ஐயர் , ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் ,ஈரானிய நடிகை நொய்ரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பிரசாத் எஸ்என் இசையமைக்க விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் ஹார்றார் காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது. 1940 காலகட்டத்தில் பண்ணையாரின் மகள் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திரம் ரொம்ப தத்துரூபகாமா உருவாகியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இந்த படம் பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com