‘கலகத் தலைவன்’ முதல்வர் வாழ்த்து!

‘கலகத் தலைவன்’ முதல்வர் வாழ்த்து!

‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ பட நிறுவனத் தயாரிப்பில், உதயநிதி நடித்து, இயக்நர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம், ‘கலகத் தலைவன்.’ உலகமெங்கும் இன்று வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை முன்னதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டானின், அந்தத் திரைப்படக் குழுவினருடன், தனியார் திரையரங்கு ஒன்றில் கண்டு களித்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தார். படத்தைப் பார்த்த முதல்வர், சமூக அக்கறையுடன் மிகவும் நேர்த்தியான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதாக, படக் கதாநாயகன் உதயநிதி, இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட, ‘கலகத் தலைவன்’ திரைப்படம் நோய்த்தொற்று, ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் தாமதமாகி, தற்போது நிறைவடைந்து திரையரங்குளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக ‘பிக்பாஸ்’ புகழ் ஆரவ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான கலையரசனும் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்துக்கு முன் தடம், தடையற காக்க மற்றும் மீகாமன் போன்ற திரில்லர் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இடம்பெறும் இந்தத் திரைப்படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்து இருக்கிறார். முதல்வர் வாழ்த்தினால் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றனர் ‘கலகத் தலைவன்’ படக் குழுவினர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com