கெளதம்  கார்த்தி - மஞ்சிமா மோகன்
கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகன்

"கல்யாண வைபோகமே"...!

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்திற்கு பின்பு அடுத்த சினிமா நட்சத்திர ஜோடிகளின் திருமணத்திற்கு தயாராகிறது தமிழ் சினிமா.

அரசல் புரசலாக கிசு கிசுக்கப் பட்ட கெளதம் கார்த்தி -மஞ்சிமா மோகன் காதல் இப்போது திருமணத்தில் முடியுள்ளது. இவர்கள் இருவருமே சேர்ந்து தங்கள் திருமணத்தை அறிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் கார்த்தியின் மகனான கெளதம் கார்த்தி மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகம் ஆனார். தற்போது பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். மஞ்சிமா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி கதாநாயகியாக சில படங்கள் நடித்து தமிழுக்கு வந்தார். மலையாளத்தில் இவர் நடித்த 'ஒரு வடக்கன் செல் ஃபி' பல்வேறு பாராட்டுக்களை பெற்றது.

தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் அறிமுகம் ஆனார். மஞ்சிமாவின் அழகான உருண்டை முகமும், கொஞ்சம் குண்டான உடம்பும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

மஞ்சிமாவும் கெளதம் கார்த்தியும் தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்தார்கள் சேர நாட்டு பைங்கிளி மஞ்சிமாவிற்கும், நம் தமிழ் நாட்டு சாக்லேட் பாய் கெளதம் கார்த்திக்கிற்கும் வரும் நவம்பர் 28 ம் தேதியன்று சென்னையில் திருமணம் நடை பெற உள்ளது. இந்த தகவலை இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்கள் முன் பகிர்ந்து கொண்டார்கள்.

கெளதம்  கார்த்தி - மஞ்சிமா மோகன்
கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகன்

முதலில் காதலை சொன்னது கௌதம்தானாம். மஞ்சிமா உடனே ஒகே சொல்லவில்லையாம். பொறுமையாக யோசித்து இரண்டு நாட்கள் கழித்துதான் ஒகே சொல்லியிருக்கிறார். பிற மாநிலத்திலிருந்து தமிழ் படங்களில் நடிக்கும் போது மக்கள் தன்னை ஏற்று கொள்வார்களா? என்ற பயம் மஞ்சிமாவிற்கு இருந்ததாம்.

இந்த பயத்தை போக்கியதும் கெளதம் மீது காதல் வர முக்கிய காரணமாம். மஞ்சிமாவிடம் உள்ள சுதந்திர சிந்தனை கெளதம் காதல் வயப்பட முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. மஞ்சிமா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பாராம். பரஸ்பர புரிதலே காதல் என்பதை புரிய வைக்கும் இந்த ஜோடிகள் இல்வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்து வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com