7 வில்லன்களோடு மோதும் கமல்! எந்த படத்தில் தெரியுமா..?

7 வில்லன்களோடு மோதும் கமல்! எந்த படத்தில் தெரியுமா..?

கமல் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற நிலையில் தற்போது, டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

26 வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'இந்தியன்'. இதில் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகவும் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, ஒருசில வருடங்களுக்கு முன் இதே ஷங்கர், கமல் கூட்டணியில் 'இந்தியன் 2' திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி, படப்பிடிப்புகளும் நடந்து வந்தன. பின்னர் 'இந்தியன் 2' படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியிலேயே நின்ற நிலையில், கமலின் 'விக்ரம்' பட வெற்றிக்குப் பின், மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக ஆரம்பித்தது. பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், சமுத்திரக்கனி, பாபி சிம்கா, சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், பெரிய நடிக பட்டாளங்கள் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் 'இந்தியன் 2' திரைப்படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com