கார்த்தி
கார்த்தி

ரசிகனுக்கு இறுதி அஞ்சலி செய்த கார்த்தி!

ஒரு ஹீரோ உருவாவதில் ரசிகனுக்கு மிக பெரிய பங்களிப்பு உள்ளது. தமிழ் நாட்டில் ரசிகர் மன்றங்களுக்கு மிக பெரிய வரலாறு இருக்கிறது. ரசிகர் மன்றம் மூலமாக அரசியல் மாற்றங்கள் நிகழ்த்தி ஆட்சியை பிடித்த நிகழ்வும் நம் தமிழ் நாட்டில் நடந்துள்ளது.

நடிகனை வெகு ஜன மக்களிடையே கொண்டு செல்வது இந்த ரசிகன்தான். ஆனால் சமீப காலமாக இந்த ரசிகனுக்கோ, அவனது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நம் ஹீரோக்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கார்த்தி இதில் முற்றிலும் மாறுபட்டவர்.

கார்த்தி
கார்த்தி

சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக இருப்பவர் வினோத். வயது 29. ஓட்டுனராக பணிபுரிபவர். திருவான்மையூரில் வசிக்கும் வினோத் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார். கார்த்தி, வினோத் வீட்டிற்கே நேரில் சென்று அப்பா அம்மாவிற்கு ஆறுதல் கூறி இறுதி மரியாதை செய்துள்ளார். கார்த்தி பல்வேறு சிறந்த ஆக்கபூர்வமான விஷயங்களை தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறார். இதை அனைத்தையும் விட சரியான நேரத்தில் தரும் உதவிக் கரமும் ஆறுதலும் கார்த்தியின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com