கார்த்தி
கார்த்தி

கார்த்தியின் சர்தார் 'ஆஹா' OTT ரிலீஸ்!

நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “சர்தார்”.

இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் OTT யில் நவம்பர் 24 அன்று ஒளிபரப்பாக உள்ளது.

சர்தார்
சர்தார்

தியேட்டர் வெளியீட்டிலேயே நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்ற திரைப்படம் இது. இந்த திரைப்படத்திற்கான உரிமையை ஆஹா OTT தளம் பெற்று வரும் நவம்பர் 24 அன்று படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவனாக நடித்ததால் தற்போது நடிகர் கார்த்தி மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் தியேட்டரிலோ அல்லது OTT யிலோ நல்ல ஒரு வரவேற்பினை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com