கவிப்பேரரசு புலமையும் ஜி.வி.பிரகாஷ் அழகிசையும்!

கவிப்பேரரசு புலமையும் ஜி.வி.பிரகாஷ் அழகிசையும்!

வி.கே.புரொடக் ஷன் தயாரிக்கும், ‘மாவீரா’ படத்தின் இரண்டாவது பாடலுக்கான மெட்டமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. கவிப்பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாஷின் அழகிசையும் இந்தப் பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் என்பதற்கு கட்டியம் கூறியது. பத்தே நிமிடத்தில் தயாரான இந்தப் பாட்டின் வரிகள் சில…

‘பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி
விட்டது யாரு?

சீனிக்கட்டியில செலை ஒன்னு
செஞ்சு வச்சது போல
எட்டா ஒயரத்தில் எச்சி ஊற
விட்டது யாரு?

வன்னித் தமிழா வாய்யா
உனக்கு வாச்சப் பொருளைத் தாயா
பச்ச முத்தம் ஒன்னு கொடுத்தா
பற்றிக் கொள்வேன் தீயா

அடி வஞ்சிக்கொடியே வாடி
வளர்த்த பொருளத்தாடி
பாசத்த உள்ள வச்சுப்
பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும்வாய மெல்லுறியே

மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறுப் புலிக்குட்டி
அவசரமா வேணுமடி…’

இப்படி இன்னும் நீள்கிறது பாடல்... மாவீரா ஒரு வெற்றிப்படம் என்பதை இந்த இரண்டாவது பாடலும் உறுதிபடுத்தியது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com