கீர்த்தி சுரேஷ் சகோதரி ரேவதி சுரேஷ் டைரக்டர் ஆனார்! வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
1980-87 காலகட்டங்களில் 125 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மேனகா. பெரும்பாலும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருந்தாலும், தமிழ், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.
இவரது மகள்தான் தற்போது, முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம்வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ரேவதி என்ற சகோதரியும் உள்ளார். இவர் தற்போது டைரக்டராகி களமிறங்கியுள்ளார்.
தமிழ், மலையாளம் என பிரபல டைரக்டராக இருந்துவரும் பிரியதர்ஷனிடம், சில வருடங்களாக ரேவதி சுரேஷ் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தற்போது 'தேங்க் யூ' என்ற குறும்படத்தை ரேவதி சுரேஷ் இயக்கியுள்ளார். ஏற்கெனவே இவர், மலையாள படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதையடுத்து விரைவில் திரைப்படம் டைரக்ட் செய்யவும் தயாராகி வருகிறார்.
இப்படத்துக்கான போஸ்டரை அவரது சகோதரியான நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.