உதயநிதி ஸ்டாலினின்  ’கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின்  “குறு குறு” பாடல்!  ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மாலை வெளியிடூ!

உதயநிதி ஸ்டாலினின் ’கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் “குறு குறு” பாடல்! ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மாலை வெளியிடூ!

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”கண்ணை நம்பாதே”- திரைப்படத்தின் முதல் பாடலான “குறு குறு” பாடலை இன்று மாலை வெளியிட உள்ளதாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ’கண்ணை நம்பாதே’ திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

”கண்ணை நம்பாதே”- படத்தின் ட்ரெய்லரை படக்குழு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்டது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கண்ணை நம்பாதே
கண்ணை நம்பாதே

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார். அவர் அமைச்சராவதற்கு முன்பு கமிட் ஆகிய திரைப் படம் தான் ”கண்ணை நம்பாதே”. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப் படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கும் ’கண்ணை நம்பாதே’ படத்தில் உதயநிதி நடித்துள்ளார்.

”கண்ணை நம்பாதே” படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்

’கண்ணை நம்பாதே’ திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “குறு குறு” பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக ரெட்ஜெயிண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com