அல்லுவுக்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் அண்ணாச்சி! வேற லெவல்...
சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே பிரம்மாண்ட ஜவுளி மாளிகை என்பதைத் தாண்டி லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி என்ற பெயர்தான் இப்ப டாப் கியர்ல இருக்கு. அதற்கு ஒரே காரணம் அவரும் சினிமாவுக்குள் என்ட்ரியானதுதான்.
தனது கடை விளம்பரத்தில் முதன்முதலாக தோன்றி அட்ராசிட்டி பண்ண ஆரம்பித்து, அடுத்து 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இவருக்கு ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்ததோடு, பிரபு, விஜயகுமார், ரோபோ சங்கர், விவேக், மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரம்மாண்டமாக, இருந்தது.
இவரது நடிப்பு ரசிகர்கள் பலராலும் கேலி செய்யப்பட்டாலும், எதையும் பொருட்படுத்தாமல், அதையெல்லாம் தாண்டி அடிமேல் அடியெடுத்து வைத்து வருகிறார் லெஜண்ட் சரவணன்.

சமீபத்தில் 'தி லெஜண்ட்' திரைப்படம் ஹாட் ஸ்டார் ஒடிடியில் ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து, ஹாட் ஸ்டாரில், தற்போது அவரது படம்தான் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தற்போது காஷ்மீரில் இருக்கும் பட்சத்தில் அங்கிருந்து அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ட்ரெண்ட்டாகி வருகிறார். அவரும் காஷ்மீரில், லியோ படக்குழுவும் காஷ்மீரில். இதை வைத்து, லெஜண்ட் சரவணன் 'லியோ' படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வைரலானது.
ஆனால் லெஜண்ட் சரவணனோ, தனது அடுத்த படத்திற்காக வேற லெவல் கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன.
அந்த போட்டோஷூட்டில் உள்ள புகைப்படத்தில் தாடி, மீசையுடன் வேற லெவல் கெட்டப்பில் இருக்கிறார். 'அலவைகுந்தபுரம்' படத்தில் இதே போன்று ஒரு கெட் அப்பில் அல்லு அர்ஜூன் வந்திருப்பார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், அல்லு அர்ஜூனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த போட்டோஷூட் அமைந்துள்ளதாகவும், சிபிராஜ் மாதிரி இருக்கீங்க என்றும் பதிவிட்டு வருகின்றனர்.