ரகுல் ப்ரீத் சிங் எடுத்துக் கொண்ட “கிரையோதெரபி” சிகிச்சை பற்றி அறிந்து கொள்வோமா?

ரகுல் ப்ரீத் சிங் எடுத்துக் கொண்ட “கிரையோதெரபி” சிகிச்சை பற்றி அறிந்து கொள்வோமா?

கிரையோதெரபி…

சில நேரங்களில் இது குளிர் தெரபி அல்லது குளிர் சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

மிகமிகக்குறைந்த வெப்பநிலையில் தரப்படும் லோகல் மருத்துவ சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

இந்தவகை சிகிச்சைமுறையானது பல்வேறு திசு புண்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படலாம். இந்த வார்த்தையின் மிக முக்கியமான பயன்பாடு அறுவை சிகிச்சையைக் குறிக்கிறது, குறிப்பாக கிரையோசர்ஜரி அல்லது கிரையோஅப்லேஷன் என அழைக்கப்படுகிறது. மிகவும் குளிர்ந்த திரவம் அல்லது கிரையோபிரோப் எனப்படும் கருவியானது அசாதாரண திசுக்களை உறையவைக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை. ஒரு கிரையோபிரோப் கருவியானது திரவ நைட்ரஜன், திரவ நைட்ரஸ் ஆக்சைடு அல்லது சுருக்கப்பட்ட ஆர்கான் வாயு போன்ற பொருட்களால் குளிர்விக்கப்படுகிறது.

- என்பது இந்த சிகிச்சை முறைக்கான விளக்கம்.

இதில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு என்ன வேலை என்று தோன்றலாம்.

சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அப்போது தான் ஹீட் தெரபியில் இருந்து வெளிவந்த அறிகுறி தெரிந்தது. ஆனால், அவர் பகிர்ந்து கொண்டதோ கிரையோதெரபி சிகிச்சை குறித்த சந்தோஷத்தை. இரண்டுமே ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர் எதிரான சிகிச்சைமுறைகள்.

ரகுல் என்ன செய்தார்? முதலில் சனா தெரபி எனப்படும் டிரை ஹீட் சிகிச்சைமுறையை எடுத்துக் கொண்டு பிறகு அப்படியே மைனஸ் 15 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான உறைபனி குளிர் சிகிச்சைமுறையான கிரையோதெரபி எடுத்துக் கொண்டாரா என்று ரசிகர்களுக்கு குழப்பமாகி விட்டது.

சானா ஹீட் தெரபி...

சானா ஹீட் தெரபி என்பது டிரை ஹீட் வெப்பத்தால் நிரப்பப்பட்ட ஒரு அறையில் ஓய்வாக அமர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஒரு அறை. உடற்பயிற்சியிலிருந்து பெறப்பட்டதைப் போன்ற இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை இது வழங்கலாம்.

ரகுல் முதலில் சானா ஹீட் தெரபிக்கு உட்பட்டு விட்டு அந்த வெப்பத்தில் இருந்து விடுபடும் முயற்சியாக உடனடியாக கிரையோ தெரபியில் குதித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு சிகிச்சை முறைகளுமே அதற்கேற்ற விதத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பின்பற்ற தகுந்த அளவில் உடல் ஆரோக்யத்திற்கு உகந்தவையே எனக் கண்டறியப்பட்டவையே.

முன்னது காயமான திசுக்களைக் காப்பாற்றும் என்றால், பின்னது இதய ஆரோக்யத்துக்கு நல்லது என்கிறார்கள்.

இந்த வெயிலுக்கு சில்லென்று ஐஸ்கட்டிகளை மட்டுமே உபயோகித்து ஒரு நீச்சல் குளம் கட்டி அதற்குள் சற்று நேரம் செலவிட்டால் கூட சுகமாகத்தான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com