லிங்குசாமி
லிங்குசாமி

மீண்டும் களமிறங்குகிறார் லிங்குசாமி!

பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்த லிங்குசாமி சில காலம், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மூலமாக எந்த படத்தையும் வெளியிடாமல் இருந்தார்.

தற்சமயம் மீண்டும் நல்ல சினிமாக்களை வாங்கி தனது நிறுவனம் மூலமாக வெளியிட உள்ளார். 'பிகினிங்' என்ற திரைப்படத்தை ஜெகன் விஜயா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இந்த படத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக 'பிளவு திரை' ( split screen ) என்ற புதிய திரை நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார்கள். இந்த படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது. இருப்பினும் பல்வேறு நிறுவனங்கள் இந்த படத்தை வெளியிட தயக்கம் காட்டின.

பிகினிங் படக்குழுவினர்
பிகினிங் படக்குழுவினர்

இயக்குனர் ஜெகன் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை அணுகி உள்ளார். இந்த படத்தை பார்த்த லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க ஒப்புக்கொண்டு விட்டார்.

'பிகினிங்' படத்தின் விழாவில் பேசிய லிங்குசாமி "இந்த படம் தியேட்டரில் வெளியாக வேண்டிய படம் என்பது பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். டைரக்டர் ஜெகன் இந்த படம் எடுக்க தனது அம்மா இடத்தை விற்று பணம் தந்ததாக கூறினார். அப்போதே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

மீண்டும் எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிகினிங் படம் வழியாக தயாரிப்பு, வெளியிடுதல் போன்ற விஷயங்களில் அடிஎடுத்து வைக்கிறது" என்றார்.

திருப்பதி பிரதர்ஸ் என்றால் நான்கு அண்ணன் தம்பிகள் என்று மட்டும் நினைத்திருந்தேன். ஆனால் இங்கே நாற்பது பேர் வரை அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள். இவர்களுடன் நானும் இப்போது சேர்ந்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர் உணர்ச்சி பொங்க. 'பிகினிங்' திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com