அஜித் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த மாஸ் ரிப்ளை!

அஜித் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த மாஸ் ரிப்ளை!

இளம் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும்நிலையில், தற்போது 'விக்ரம்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியின் மூலம் மாஸ் டைரக்டர்களின் வரிசையில் இணைந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.

அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், அவரது இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் தளபதி விஜய் கூட்டணியில் 'தளபதி 67' படத்தை இயக்கவிருக்கிறார்.

லோகேஷ், தளபதி கூட்டணி என்றால் அது தளபதி ரசிகர்கள் மத்தியில் டபுள் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல 'தல' அஜித்துடன் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியும் பலரிடையே உலவி வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் லோகேஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில், 'தல' அஜித்துடன் இணைவீர்களா? என்பதுதான். இதற்கு பதிலளித்த லோகேஷ், அஜித்துடன் இணைவது என்பது எனக்கு மிகப்பெரிய ஆசை தான். அந்தவகையில் அவருடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில் அது 'தீனா' மாதிரியான ஒரு படமாக அமையும் என்று வெளிப்படையாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு லோகேஷ் கூறியதைப் பொருட்டு, அஜித்-லோகேஷ் கூட்டணியில் அடுத்த படம் உருவாகவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் நடிக்கவிருப்பதாக தெரியவருகிறது.

லோகேஷ்-அஜித் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருப்பதால், விக்னேஷ் சிவன் படத்தைத் தொடர்ந்து, ரசிகர்களின் விருப்பத்தை அறிந்து, நிச்சயம் அஜித் லோகேஷின் படத்தில் நடிக்க கமிட் ஆவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com