பிரின்ஸ்
பிரின்ஸ்

கடல் கடந்த காதல்: பிரின்ஸ்!

வரும் தீபாவளி நாளன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வெளியாகிறது. ஒரு தமிழ் பையனுக்கும் பிரிட்டன் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல், சிவகார்த்திகேயனின் சர வெடி காமெடியில் நகைச்சுவையுடன் சொல்லியிருகிறார் டைரக்டர் அனு தீப்.

" இன்னுமாடா ஜாதி மதம் என்று அடிச்சுகிறீங்க" என்ற வசனத்துடன் ட்ரைலர் தொடங்குகிறது. டான் படத்தில் மாணவனாக நடித்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தில் ப்ரோமோஷனாகி ஆசிரியராக நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், பிரேம்ஜி, கங்கை அமரனும் நடிக்கிறார்கள். சத்யராஜின் லொள்ளு கலந்த காமெடியும், பிரேம்ஜியின் கிளாமர் கலந்த நகைச்சுவையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்க போகிறது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். சிவகார்த்திகேயன் தன்னை ஒரு பெரிய ஹீரோ என்று காட்டி கொள்ளவே தீபாவளி நாளன்று தன் படத்தை வெளியிடுகிறார் என்ற கருத்தும் சினிமா வட்டாரத்தில் உள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

கருத்துக்கள் எதுவாயினும் சிவாவை தங்கள் வீட்டு பிள்ளையாக தமிழக மக்கள் நினைக்கிறார்கள். பிரின்ஸ் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பே இதற்கு சாட்சி.

இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோசப்க்கா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனைத்து வயதினரும் பார்க்கும் U சான்றிதழ் கிடைத்துள்ளது.

தீபாவளி என்றாலே எனர்ஜி, கொண்டாட்டம் தான் இது சிவகார்த்திகேயன் படங்களிலும் இருக்கும் தீபாவளியன்று பிரின்ஸ் வெளியாவது மிக பொருத்தமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com