பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

அடுக்கடுக்கான சர்ச்சையில் லவ் டுடே இயக்குநர்! முகநூல் கணக்கை நீக்கினார் பிரதீப் ரங்கநாதன்!

லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுக்கடுக்கான சர்ச்சை பதிவுகள், சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகிய நிலையில் அவர் தனது முகநூல் கணக்கை நீக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் பதிவு செய்ததாக அவருடைய சமூக வலைதளபக்கங்களின் பதிவுகள் தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்தப்புகைப்படங்களுக்கு தற்போது பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. படம் வெளியானது முதல் பலரும் பிரதீப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் பெயரில் பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

love today
love today

என் பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கை நீக்கி விட்டேன் என் தரப்பு விஷயங்களை மாற்ற முயல்பவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பத்தைக்காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி என்று பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com