பரிசாக வந்த காரை வாங்க மறுத்த லவ் டுடே பிரதீப்... அதற்குப்பதில் இதுதான் வேண்டுமாம்!

பரிசாக வந்த காரை வாங்க மறுத்த லவ் டுடே பிரதீப்... அதற்குப்பதில் இதுதான் வேண்டுமாம்!

சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு புதிய ரோல்மாடலாகத் திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன்.

இதுவரை இரண்டு படங்களே இயக்கியிருந்தாலும், அந்த இரண்டு படங்களின் வெற்றியும் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையிலும், இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஹீரோவாகவும், இயக்குநராகவும் வலம் வரும் இந்த பிரதீப் ரங்கநாதன் யார் என்று இளைஞர்களும் அறிந்துகொள்ள முற்பட்டனர். அப்போதுதான் இந்த இடத்தை பிடிக்க பிரதீப் கஷ்டப்பட்டதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகிற்கு தெரிய வந்தது. அந்தவகையில் ஆரம்பத்தில் குறும்படங்களில் மெல்ல ஆரம்பித்து, படிப்படியாக பெரிய திரைக்கு முன்னேறி இரு படங்களையும் இயக்கி, இன்று கோலிவுட் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறியிருக்கிறார்.

அதன்படி, ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்க, 2019ல் 'கோமாளி' படத்தை முதன்முதலாக இயக்கி கோலிவுட்டில் இளம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றி படமாகவும் மாறியது.

இப்படத்தின் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் விதமாக அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு சூப்பர் மாடல் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டதாம். அச்சமயம், தனக்கு கார் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் பிரதீப் ரங்கநாதன். அப்படி வாங்கினால் தன்னால் அந்த காருக்கு பெட்ரோல் போட்டு பயன்படுத்த முடியாது என்றும், அதனால் அந்த காருக்கு பதிலாக அதற்கு சமமான பணத்தை கொடுத்தால் அடுத்த படம் எடுக்கும்வரை தனக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும் என்று கூறி பணத்தை வாங்கிக் கொண்டாராம்.

இவர் இதுபோல நிறைய விஷயங்களில் தன்னுடைய வளர்ச்சியையே பெரிய லட்சியமாக கருதி வாழ்க்கையில் முன்னோக்கி வந்துள்ளார். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு பிரதீப்பின் இந்த அனுபவங்கள் பெரிய பாடமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com