'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனை வியந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - பிரதீப் ரங்கநாதன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை 'ஏஜிஎஸ்ப்ரொடக்ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பிரதீப் நடித்திருந்தார். கதாநாயகியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

லவ் டுடே
லவ் டுடே

யார் இந்த பிரதீப் ரங்கநாதன்?

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். சமூகக் கருத்துக்களை கொஞ்சம் காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக வெளியான கோமாளி திரைப்படம் , ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது .

ரஜினி பாராட்டு:

இந்நிலையில் 'லவ் டுடே' படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை மிகவும் பாராட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதீப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இதைவிட நான் என்ன கேட்க முடியும். சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு, அந்தக் கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் அன்பு. ரஜினிகாந்த் சார் லவ் டுடே பார்த்து என்னை வாழ்த்தினர். நீங்க சொன்ன வார்த்தைகளை எப்போதும் மறக்கமாட்டேன் சார்" என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com