OTT யில் லவ் டுடே!

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

வசூலில் சக்கைபோடு போட்ட ‘லவ் டுடே’ திரைப்படம் OTT யில் வெளியாகப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக இளம் இயக்குனர்களின் வரவு தற்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. அது மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்தபடி படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கபட்டு பல தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறார்கள் இளம் இயக்குனர்கள்.

இந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்திருக்கிறது. இதற்கு முன்பு பல குறும் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் இந்த ப்ரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

love today
love today

இத்திரை படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கிய இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாகியது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியது.

பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதில் இடம்பிடித்தார் இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக்கிய திரைப்படம் தான் லவ் டுடே இந்த திரைப்படத்தை ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடித்திருந்தார். நாச்சியார் திரைப்படத்தில் நடித்த இவானா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல்செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் OTT தளத்தில் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தற்பொழுது OTT ரிலீஸ் குறித்த தகவலை பட குழு வெளியிட்டுள்ளது.

லவ் டுடே திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி OTT  இணைய தளமான Netflix தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com