'மாமன்னன்' அப்டேட்! ரசிகர்கள் எதிர்பார்த்தது... 19ம் தேதி வெளியாகுது! படக்குழு அறிவிப்பு!

'மாமன்னன்' அப்டேட்! ரசிகர்கள் எதிர்பார்த்தது... 19ம் தேதி வெளியாகுது! படக்குழு அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.' இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு, அதிகமாக காமெடிப் படங்களில் நடித்துள்ளதோடு, ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாவும் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது 'மாமன்னன்' படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

அரசியல்வாதி லுக்கில் வடிவேலு வேஷ்டி, சட்டையுடன் கையில் துப்பாக்கியுடனும், அவருடன் உதய்நிதி ஸ்டாலின் கையில் வாளுடனும் அருகில் உட்கார்ந்துள்ள அந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், வடிவேலுவின் கதாபாத்திரம் எப்படி இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டிவர, மறுபுறம் வைகைப்புயல் வடிவேலு, இசைப்புயல் இசையில், யுகபாரதி வரிகளில் உருவான பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். இதுகுறித்த தகவலும் ஏற்கெனவே வெளியானது.

இந்நிலையில், தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டு, வடிவேலு பாடியுள்ள அந்தப் பாடல் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு, வைகைப் புயலின் வித்தியாச தோற்றம், ஏஆர் ரஹ்மான் இசையில் வைகைப் புயலின் பாடல் என இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com