மஹிமா
மஹிமா

மீண்டும் மஹிமா !

சாட்டை, குற்றம் 23 உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்த மஹிமா நம்பியார் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

எங்கேயும் எப்போதும் வெற்றி படத்தை இயக்கிய சரவணன் நாடு என்ற படத்தை இயக்குகிறார். இந்த நாடு படம் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி தருக்கிறார் மஹிமா. இவர்க்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் தர்சன் நடிக்கிறார்.

mahima
mahima

இந்த படத்தை பற்றி மஹிமா சொல்லும் போ து "சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நான் இந்த படத்தில் டாக்டராக நடிக்கிறேன். எப்போதும் ஜாலியாக நடிக்கும் நான் நாடு படத்தில் கொஞ்சம் பக்குவமான டாக்டராக வருகிறேன். ஆனாலும் ஜாலியான மஹிமாவை பார்க்கலாம் "என்கிறார். நாடு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிங்கம் புலி பேசும் போது "மஹிமா என்னை அழைக்கும் போது சிங்கம் புலி அண்ணா என்று அழைத்தார். இது கொஞ்சம் எனக்கு வருத்தம்தான்" என்று நகைச்சுவையுடன் கூறினார்.

Mahima
Mahima

சில மாதங்களுக்கு முன்பு மஹிமா பயணத்தின் போது அசந்து தூங்கும் வீடியோ ஒன்றும் அதன் கீழ் சில கிண்டலான கமெண்ட்களும் பகிரப்பட்டன. இதனால் கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்த மஹிமா இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு மறுபடியும் பழைய மஹிமாவாக ஜாலியாக, அதே புன்னகையுடன் வலம் வர தொடங்கியுள்ளார்.

கீப் இட் அப் மஹிமா!!!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com