மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணி குறித்த பட அறிவிப்பு வெளியீடு!
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் அடுத்து 'கர்ணன்' பட இயக்குநர் மாரி செல்வராஜூடன் கூட்டணி அமைக்கவிருக்கிறார்.
தமிழில் அழுத்தமான கதைகளைக் கொடுத்து மக்களிடையே பிரபல இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில், தனுஷ் ஏற்கெனவே 'கர்ணன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜின் படைப்புகளான, 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' இரண்டுமே வித்தியாச படைப்புகளாக மக்களிடையே பார்க்கப்பட்டது.
இதையடுத்து, இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படம் விரைவில் வெளியாகும என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தயாரிப்பில் 'வாழை' படப்பிடிப்பும் முடிந்துள்ளது. அதேபோல், தனுஷின் அடுத்த படமான 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மறுபடியும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை முடித்த கையோடு சன் பிக்சர்ஸ்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக மாரி செல்வராஜூடன் இணையும் தனுஷ் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜின் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க, ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.