vaazhai movie
vaazhai movie

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் 'வாழை'!

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். இதுவும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதையடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க, 'மாமன்னன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று சிறப்பாக துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் இத்திரைப்படத்திற்கான தொடக்க விழா, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தனது முதல் படத்திலேயே, சிறந்த படைப்பாளியாக அனைவராலும் பார்க்கப்பட்ட மாரி செல்வராஜ், இப்படத்தை இயக்குவதோடு, முதன்முதலாக தயாரிப்பாளராகவும் களமிறங்குகிறார்.

சிறுவர்களின் கதாபாத்திரங்கள் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க, சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பலர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com