மரணத்துக்கு அருகே சென்ற அனுபவத்தை தந்தது மார்க் ஆண்டனி:விஷால் கருத்து!
நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் மார்கண்டின் திரைப்படம் மரணத்திற்கு அருகில் சென்று அனுபவத்தை தந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் இன்று மார்க் ஆண்டனி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுனில், செல்வராகவன், ரிது வருமா, கிங்ஸ்லி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி மக்களினுடைய வரவேற்பை பெற்ற நிலையில் படம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாநாயகன் விஷால் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த ஓராண்டாக கடின உழைப்பு, இரத்தம், வியர்வை, வலி, காயம் மற்றும் மரணத்திற்கு அருகில் வரை சென்று பல்வேறு அனுபவங்களை பெற்று மார்க் ஆண்டனி திரைப்படத்தை உருவாக்கியுள்ளம். தற்போது டைம் டிராவல் கேங்ஸ்டரினுடைய கதை உலகம் முழுவதும் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.
எனக்கு இரண்டு கடவுள்கள் விருப்பமானவர்கள் திருப்பதியில் இருக்கும் கடவுள் மற்றொன்று திரையரங்குகளில் இருந்து 19 ஆண்டுகால எனது திரை வாழ்க்கையை ஆசீர்வதித்து வருபவர்கள் என்று கூறியுள்ளார்.மேலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது பாசிட்டிவான விமரிசனங்களை சந்தித்து வருவதால், படம் வசூல் ரிதியாகும் வெற்றியடையும் என்று சொல்லப்படுகிறது.