மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. அவரது நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

அந்த வரிசையில் மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' திரைப்படத்தில் நடித்து வந்தார். இது 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' (2006) திரைப்படத்தின் தொடர்ச்சியே ஆகும்.

இந்நிலையில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதன் காரணமாக ஷங்கர் அவர்மீது புகார் கொடுத்திருந்தார். ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

பல பிரச்சனைகளுக்குப் பின்னர் ரெட் கார்ட் நீக்கப்பட்டு, வடிவேலு தற்போது, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகள் படுஜோராக நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, சமீபத்தில் 'நாய் சேகர்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. பாடல் வரிகளை கவிஞர் விவேக் எழுதி இருந்தார்.

இந்நிலையில், தற்போது வடிவேலு பாடி நடித்து ரிலீஸ் ஆகியுள்ள முதல் பாடலான அப்பத்தா பாடலில், ‘நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். சில நாயால சீக்காளி ஆனேன்’ என்கின்ற வரிகள் இடம்பெற்றுள்ளதுதான் தற்போது சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால்தான் ரெட் கார்ட் வாங்கி இவ்வளவு நாள் நடிக்காமல் முடங்கி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவரை சீண்டுவதுபோல் இந்த பாடல் வரிகளும் அமைய, அவரும் அதைப் பாடியதால், ஷங்கரை வம்பிழுக்கும் நோக்கத்தில்தான் இந்த வரிகளை பாடலில் சேர்த்துள்ளதாகவும் நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com