எம்ஜிஆர் மட்டுமே சூப்பர் ஸ்டார்:நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு!
நடிகர் ரஜினியின் வயதின் முதுமை காரணமாக தமிழ் திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் எம்ஜிஆர் மட்டுமை சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர். அதற்கு மன்சூர் அலிகான், யாரை யாருடன் ஒப்பிட்டாலும் அவரவர் அவரவர் இடத்திலயே இருக்கின்றனர். இளமையாக இருக்கக்கூடிய நடிகர்களுக்கு வழி விட வேண்டும். என்னை பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது எம்ஜிஆர் மட்டுமே தான் என்று தெரிவித்தார்.
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்துனுடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொடங்கிய அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சர்ச்சை, தற்போது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இதனால் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் விஜய்னுடைய ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.