‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் மோஷன் போஸ்டர்! கௌதம் மேனன் வெளியீடு!

‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் மோஷன் போஸ்டர்! கௌதம் மேனன் வெளியீடு!

இளையராஜாவின் 1,417 வது படமாக உருவாகி வருகிறது ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம்.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை, கௌதம் வாசுதேவன் மேனன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

"இந்தப் படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார் இசைஞானி. அதில் ‘இதயமே, இதயமே...’ என்று தொடங்கும் பாடலை இளையராஜா எழுத, ‘யங் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். பழநிபாரதி, சினேகன் ஆகியோர் மற்ற பாடல்களை எழுதியிருக்கின்றனர். ‘மனசுக்குள் தோன்றிய முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது’ என்ற கருத்தை மையமாக வைத்து, இளமை துள்ள இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பள்ளிப் பருவத்துக் காதலைக் கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல் 96 படங்களின் வரிசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் நீங்கா இடம் பிடிப்பது உறுதி. விரைவில் முதல் பாடல் வெளியிடப்பட இருக்கிறது" என்று தெரிவித்தார் இயக்குனர் ஆதிராஜன்.

ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க, சண்டைக் காட்சிகளை பிரதீப் தினேஷ் உருவாக்கியிருக்கிறார். நடனக் காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com