யார் இந்த ரசவாதி?

ரசவாதி
ரசவாதி

மௌனகுரு,மகாமுனி படங்கள் மூலம் தனது மாறுபட்ட அடையாளத்தை நிரூபித்தவர்  இயக்குநர் சாந்தகுமார். தற்போது இவர் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – (The Alchemist) திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது 

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம்  ஆழமான தாக்கத்தையும்,புதிய காட்சி மொழியையும் உணர்த்தியவர்   இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த, நடித்த சிலரின்  சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ரசவாதியை உருவாக்கி உள்ளார். 

இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக இப்படத்தில் தமன் இசையமைக்கிறார்.

"என்னுடைய  முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் நிச்சயம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்" என்கிறார் சாந்த குமார்.இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ’ரசவாதி’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். யார் இந்த ரசவாதி? இவன் செய்யும் வேலைகள் என்ன என்பதை பற்றி விரைவில் விடை கிடைக்கும

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com