தோனியை வைத்து ஆக்‌ஷன் படம்.. மனைவி அதிரடி!

தோனியை வைத்து ஆக்‌ஷன் படம்.. மனைவி அதிரடி!

Published on

தோனியை வைத்து படம் எடுப்பதாக இருந்தால், ஆக்ஷன் கதைகளே சிறந்தது என்று அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் முதல் திரைப்படமான எல்.ஜி.எம். வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதனை ஒட்டி, சென்னையில் தோனியின் மனைவி சாக்ஷி, படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மொழி தனக்கு தடை இல்லை என்றும், தமிழ்நாட்டில் அபரிதமான அன்பு கிடைப்பதாகவும் கூறினார். மேலும், நல்ல கதை அமைந்தால், நிச்சயம் தோனி திரைப்படத்தில் நடிப்பார் என்று சாக்ஷி தெரிவித்தார்.

தெலுங்கு மொழியில் ஏதாவது படம் பார்த்துளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர், அதற்கு பதிலளித்த சாக்ஷி "நான் அல்லு அர்ஜுனின் மிக பெரிய ரசிகை, தெலுங்கு படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுவார்கள், அதை பார்த்து வளர்ந்த எனக்கு அல்லு அர்ஜுனை மிகவும் பிடிக்கும்" என்றார்.

முன்னதாக பேசிய படக்குழுவினர், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தோனியின் மனைவி சாக்ஷி கூறிய ஐடியாவை, தான் கதையாக மாற்றி இயக்கி இருப்பதாக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.எம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது எம்.ஜி.எம் படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து ஜூலை 28 ஆம் தேதி திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான தயாரிப்பு பணிகளை சாக்ஷி மேற்கொண்டு வருகிறார்.

logo
Kalki Online
kalkionline.com