அந்தகன்
அந்தகன்

முன்னணி பிரபலங்களுடன் ‘அந்தகன்’

Published on

‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடித்து வெளிவரவிருக்கும் அடுத்தத் திரைப்படம் ‘அந்தகன்.’ மிகுந்த பொருட்செலவில், ஏராளமான முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குநரும், பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தயார் நிலையில் இருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட காட்சிக்காக, ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து, இயக்க இசைந்துள்ளார் நடனப்புயல் பிரபுதேவா. பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் ஐம்பது நடனக் கலைஞர்களுடன் இந்தப் பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டவுடன், ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S.தாணு உலகமெங்கும் திரையிடத் திட்டமிட்டு வருகிறார்.

logo
Kalki Online
kalkionline.com