சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீண்டும் நடிக்க வர மாட்டார்களா என ரசிகர்கள் காத்து கொண்டு இருப்பார்கள். இது போன்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் நடிகர்தான் மோகன்.
1980களின் வெள்ளி விழா நாயகன் மோகன் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தவர், மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் நடித்துள்ள "ஹாரா" திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது.

இப்போது வரப் போகும் மோகன் நாம் முன்பு பார்த்த மென்மையான மைக் மோகன் இல்லை. தாடி வைத்து வித்தியாசமான மோகனாக இருக்கிறார். மோகன் திரைத்துறைக்கு வந்து நாற்பதைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக மோகனின் ரசிகர்கள் இந்த படத்தின் இசை வெளியிட்டை இணையத்தில் வெளியிட்டனர்.
சினிமா உலகில் ரசிகர்கள் பாடல் வெளியிடுவது இதுவே முதல் முறை. இப்படத்தில் வெளியான கய முயா பாடல் இரண்டு மில்லியன் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவது தான் இப்படத்தின் நோக்கம் என்கிறார் டைரக்டர். வித்தியாசமான கதை, வித்தியாசமான கெட்டப் வெல்கம் மோகன் சார்.