பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : நாக சைதன்யாவின் 'கஸ்டடி'!

நாக சைதன்யா
நாக சைதன்யா

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரில் பவன்குமார் வழங்கும் 'கஸ்டடி' திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார்.

அரவிந்த் சுவாமி, பிரேம் ஜி, பிரியாமணி, சம்பத், சரத்குமார், வெண்ணெலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அப்பூரி ரவி வசனம் எழுத, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகும் 'கஸ்டடி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. நாக சைதன்யா பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 'உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும்' என்று எழுதப்பட்டு இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com