நானியின் 'தசரா' திரைப்படம்!

நானி
நானி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் சுதாகர் செருகூரி தயாரித்துள்ள 'தசரா' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் நானி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பூர்ணா, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், சாய் குமார், ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி இந்தப் படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இது ஒரு பான் இந்தியா திரைப்படம். 'தசரா' திரைப்படம் மார்ச் 30ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com