'நண்பகல் நேரத்து மயக்கம்' OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

'நண்பகல் நேரத்து மயக்கம்' OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

சினிமா ரசிகர்கள் தியேட்டர்களில் எந்தப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதைப் போலவே ஒவ்வொரு வாரமும் எந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸாகிறது என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டு வருகின்றனர். இந்த வகையில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்' தற்போது ஓடிடி.,யில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆமென் மூவி மோனாஸ்ட்ரி மற்றும் நடிகர் மம்முட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பழனி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன், பூ ராமு மற்றும் பலர் தங்களது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். ஸ்லோ டிராமா உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும். இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை டிராமா, நிறைய சிந்திக்க வைப்பதோடு, மம்முட்டி யின் அருமையான நடிப்பு என்று சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த “நண்பகல் நேரத்து மயக்கம்”.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயல்பான நகைச்சுவையுடன் சேர்த்து ஆழமான சிந்தனைகள் சேர்த்து மிக தெளிவான படத்தை கொடுத்துள்ளார். எஸ்.ஹரீஷ் திரைக்கதை எழுதியுள்ளார் . தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்க முடியும் தற்போது இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com