நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மீண்டும் இணையும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மீண்டும் இணையும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

டைரக்டர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த நிலேஷ் கிருஷ்ணா நடிகை நயன்தாராவின் 75வது படத்தை இயக்கவிருக்கிறார். நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.

மலையாள திரையுலகில் 'மானசீனகரே' படத்தின் மூலம் நயன்தாரா முதன்முதலாக 2003ல் திரையில் அறிமுகமானாலும், 2005ல் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

2007ல் வெளியான 'பில்லா' திரைப்படம், இவரது கேரியரில் முதன்முதலாக திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் அவரது ஃபிட்டான உடலமைப்பும், அவரது ஆக்ஷன் சீக்குவன்ஸும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. அதைத்தொடர்ந்து 'யாரடி நீ மோகினி', 'ஏகன்', 'ஆதவன்', 'ஆரம்பம்', 'கோலமாவு கோகிலா', 'அறம்' என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

அதிலும் 2013ல் 'ராஜா ராணி' திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அட்லீ இயக்கிய முதல் படம் இது. காதலை மையப்படுத்தி உருவான அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் நயன்தாராவின் கேரியரில் மேலும் ஒரு உச்சத்தை ஏற்படுத்திக்கொடுத்தது என்றே கூறலாம்.

திருமணத்திற்குப் பின்பும் படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, அஹமத் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'இறைவன்' திரைப்படத்தில் நடித்துள்ளதோடு, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில், நயன்தாராவின் 75வது படத்திற்கான பூஜை போடப்பட்டு ஷூட்டிங் துவங்கிள்ளது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இவருக்கு இது முதல் படம். இப்படத்தில் நயன்தாராவுடன், ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதில் என்ன சிறப்பு என்றால் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மூவரும் ஏற்கெனவே 'ராஜா ராணி'யில் சேர்ந்து நடித்திருந்தனர். அதுவும் அப்படம் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீயின் முதல்படமாகவும் இருந்தது. அதேபோல் இப்படத்தில் இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதோடூ, இப்படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவரே இயக்குவதோடு, இதுவும் இவரது முதல் படம் என்பதால் 'ராஜா ராணி'க்கு இருந்த வரவேற்பு போல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிமாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com