குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன் - விக்கி.. இவ்வளவு பெரிய பசங்களா? ஷாக்காகும் ரசிகர்கள்!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது பாலிவிட்டிலும் கலக்கி வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அந்த வருடத்திலேயே அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றனர். திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இருவரும் 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. அதையடுத்து இந்த பிரச்சனை படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விக்னேஷ் சிவன், மனைவி மற்றும் குழந்தைகளின் படத்தை அவ்வபோது வெளியிடுவார். அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து, என்னுடைய உயிர் மற்றும் உலகத்துடன் முதல் ஓணம். எங்களுக்கு திருவிழா முன்னமே தொடங்கியது. எல்லாருக்கும் ஓணம் வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இருவரும் இவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டார்களா ? அப்படி அவர்களுக்கு என்ன உணவு அளிக்கிறீர்கள் என ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.