உயிர் உலகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் போட்டோஸ்!

உயிர் உலகம்
உயிர் உலகம்விஜி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னேறியவர். ஹீரோக்கள் கோலாட்சி கொண்டிருந்த காலத்தில் ஹீரோ இன்றி ஹீரோயினாக மட்டுமே நடித்து அசத்தியவர். இவருக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான நிலையில் இருவருக்கும் கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

உலக அளவில் instagram, எக்ஸ் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்கள் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.

ஆனால் நடிகை நயன்தாரா எந்த ஒரு சமூக வலைதள பகுதியிலும் கணக்கு தொடங்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது instagram பகுதியில் தனக்கென பிரத்தியேக ஒரு பகுதியை தொடங்கியுள்ளார். அந்த பக்கத்தில் முதல் பதிவாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படத்தின் ஹுக்கும் பாடலுக்கு, தன் குழந்தைகளுடன் எண்ட்ரி கொடுக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் முதன்முறையாக தனது இரண்டு குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார். இதன் தொடர்ச்சியாக அவ்வபோது பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பட்டு வேஷ்டியில் இரண்டு கிருஷ்ணர்களும் பூஜை அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டால் போதும், அனைத்து மக்களும் வீட்டில் உள்ள குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்ப்பார்கள். அந்த வகையில் நயன்தாராவும் இரு குழந்தைகளுக்கு வேஷ்டி கட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com