ஜெயம் ரவி - நயன்தாரா
ஜெயம் ரவி - நயன்தாரா

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவியுடன் நயன்தாரா!

ஜெயம் ரவியின் 29வது படம் தான் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கும் 'இறைவன்' படத்தை சுதன் சுந்தரம் தயாரிக்க 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' படங்களை இயற்றிய இயக்குநர் ஐ. அஹமது டிரெக்ட் செய்கிறார்.

இது ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இருக்கும். ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் ரவியும் நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணையும் படம் இது. கடைசியாக மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'இறைவன்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஹரி கே வேதாந்தின் ஒளிப்பதிவு செய்ய மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமீபத்தில் தான் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்றது. இதனிடையே திங்கட்கிழமை 'இறைவன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் இணை நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com