நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்
நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்

நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்!

சென்னையில் புறநகரில் மட்டுமே அதிகமான ஷூட்டிங் ஹவுஸ்கள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தும்போது போக்குவரத்து நெரிசலால் அதிகமான நேரம், மற்றும் எரிபொருள், வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போவது வழக்கம்.

தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை கே.கே நகரில்  ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்’ என்ற சொகுசு ஷூட்டிங் பங்களாவை உருவாக்கியுள்ளார், மஸ்கட். சி.ராமலிங்கம் அதில் ஃபேக்டரி செட்டப், திருமண மண்டபம், மாந்தோப்பு, பார் செட்டப், நெல்லித் தோட்டம், தென்னந் தோப்பு, வில்லேஜ் செட்டப், மற்றும் பிரம்மாண்ட செட்டுகள் போடத் தரிசு நிலம் எனப் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளும் உண்டு.

‘’ சினிமாவில் சாதிக்கும் கனவோடு வரும் உதவி இயக்குனர்களுக்கு பட்ஜெட்டை குறைக்கும் வகையில் அவர்களின் முதல் படத்துக்கு இந்த செட்டிங்கில் சிறப்பு தர இருக்கிறேன்..’’ என்றார் சி.ராமலிங்கம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com