
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் திரையுலகத்தில் மொழிகள் தடை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஸ்ரீதேவி மற்றும் தொழிலதிபர் போனிக் கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். மேலும் தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பது, தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றது. மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரித்து பார்க்க முடியாது. திரை உலகத்தில் மொழிகள் தடை இல்லை. மொழிகள் ரசிகர்களுக்கு முட்டுக்கட்டை கிடையாது.ஓ டி டி தளங்கள் இருப்பதனால் தற்போது நல்ல கதைகள் படமாக மாறுகின்றன. இது நல்ல படங்கள் உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் இதை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறோம்.
என்னுடைய முதல் படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடாக், படத்திற்கு பிறகு கவர்ச்சியான வேடத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரத்தை தேடி வருகிறேன். எவ்வளவு தூரம் என்னால் நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நடித்து வருகிறேன்.
எனக்கு திரைப்படங்களில் நல்ல முறையில் நடனம் ஆட வேண்டும், நகைச்சுவை செய்ய வேண்டும் என்பது ஆசை. எனது அம்மாவிற்கு தென்னிந்திய சினிமா அறிமுகம் கொடுத்தது, அவரை வளர்த்தது. தற்போது எனக்கும் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் கிடைத்திருக்கிறது. என் தகுதியை வெளிப்படுத்தும் சரியான நேரமாக இதை பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.